×

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்களில் ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள மச்சாயில் செக்டாரை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்திய ராணுவத்தினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி அளித்தனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் பின் வாங்கியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லையோர கிராமத்தில் வசித்த 5 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். எல்லைப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்காக இந்திய ராணுவம் கூடுதலாக ராணுவத்தினரை பாதுபாப்பு பணியில் ஈடப்பட்டுத்தப்பட்டுள்ளனர். மேலும் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.


Tags : Pakistani ,border ,Indo-Pak , Pakistani army ,infiltration,Indo-Pak border,One civilian,dies
× RELATED சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க...