ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் பாக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு ரூ.177 கோடி பரிசு தொகை

அமெரிக்கா: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் பாக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயங்கரவாதியான பாக்தாதியின் தலைக்கு சுமார் 177 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்து அமெரிக்கா தேடி வந்தது. இந்தநிலையில், சிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியை, கடந்த 26ம் தேதி அமெரிக்கா ராணுவம் சுற்றிவளைத்தபோது, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பாக்தாதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரகசிய உளவாளியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் செயல்பட்டு வந்த ஒருவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பாக்தாதியின் நடமாட்டத்தை துல்லியமாக அதிகாரிகளுக்கு தெரிவித்த அவருக்கு 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது உறவினர் ஒருவரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை செய்ததற்கு பழிதீர்க்கவே பாக்தாதியை  காட்டிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

Tags : Abu Bakr ,ISL ,terrorist leader ,Baghdadi , IS terrorist organization, Abubakar Baghdadi, spy, prize money
× RELATED மார்ச் 14ம் தேதி ஐஎஸ்எல் பைனல்