×

ஏனாமில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 46 பேருக்கு சிறை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாமில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 46 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டைல்ஸ் கம்பெனி நிர்வாகத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் ஏற்பட்ட மோதலில் 2012-ம் ஆண்டு காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனாம் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 84 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். ஏனாம் காவல் நிலைய தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம் 46 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.


Tags : police station ,Yanam , Police Station, Assault, Jail
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது