×

குழந்தை சுஜித் மரணம் எதிரொலி ஆண்டுக்கணக்கில் திறந்து கிடந்த போர்வெல் குழிகள் சீரமைப்பு

*சேலம், நாமக்கல்லில் பணிகள் மும்முரம்

சேலம் : குழந்தை சுஜித் பலியானதை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பயன்பாடின்றி கிடக்கும் ஆள்துளை கிணறுகளை மூடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் காடையாம்பட்டி, திருச்செங்கோட்டில் சில மணிநேரங்களில் அபாய குழிகள் மூடப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2வயது குழந்தை சுஜித்வில்சன், ஆள்துளை கிணற்றுக்காக ேதாண்டப்பட்ட குழாயில் தவறி விழுந்து, 5நாள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது நாடு முழுவதும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.

 இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாடின்றி கிடக்கும் ஆள்துளை கிணறுகளின் குழிகளை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்ேகாடு பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு சில மணி நேரத்தில் குழிகள் அடைக்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது.சேலத்தை அடுத்த காடையாம்பட்டி, சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூர் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் 8ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் 600 அடி ஆழம் கொண்ட ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீரின்றி பயன்பாடற்று கிடந்தது. ஒரு கட்டத்தில் போர்வெல் உடைந்து, இது அபாய குழியாக மாறியது. இது குறித்த ெசய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. தற்போது குழந்தை  சுஜித் மரணத்தை தொடர்ந்து, இந்த குழியை மூடி ஊராட்சி ஊழியர்கள் சீரமைத்துள்ளனர்.இதே போல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட மாங்குட்டைபாளையம் ஜேபிஎஸ் நகரில் 500க்கும் ேமற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஆள்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட அபாய குழி, ஆறு ஆண்டுகளாக அப்படியே கிடந்தது. சுஜித் மரணத்தை தொடர்ந்து திருச்செங்கோடு நன்மை என்ற நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் இந்த குழி குறித்த படங்கள் வைரலானது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், அந்த குழி இருந்த இடத்ைத பிளாஸ்டிக் குழாய்கள் பதித்து மூடினர். இந்த பணிகளும் சில மணி நேரங்களில் முடிக்கப்பட்டது. இப்படி ஆண்டுக்கணக்கில் தென்பட்ட அபாய குழிகள், சுர்ஜித் இறப்பால் சீரமைக்கப்பட்டு வருவது பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sujith ,death ,Salem ,Namakkal District , Borewells,closing ,local officials,Salem ,namakkal
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...