×

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர காட்டு தீ: வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் அமைந்துள்ளது. உலகிலேயே பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாகக் கொண்டிருப்பதால் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில்தான் நடைபெற்று வருகின்றன. இதனால் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இங்குதான் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த நகரின் மேற்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே அந்த தீ வனப்பகுதி முழுவதும் மளமளவென பரவியது. இதையடுத்து, கலிபோர்னியா மாகாண அரசின் உத்தரவின்பேரில் தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட் டனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, ராணுவமும், விமானப் படையும் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்று வருகின்றன. எனினும் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 618 ஏக்கர் நிலங்களும், நூற்றுக்கணக்கான வீடுகளும் காட்டுத் தீக்கு முற்றிலும் இரையாகி உள்ளன. மேலும், தீ பரவ வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் அர்னால்டு ஸ்வாஸ்னேகர், கிளார்க் கெர்ஹ், கர்ட் ஸட்டர் உட்பட நூற்றுக்கணக்கான ஹாலிவுட் நட்சத்திரங்களும் அடங்குவார்கள்.

Tags : homes ,US ,Los Angeles , America, Los Angeles, Terrific Wild Fire, Home, Thousands, Exodus
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...