×

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்: பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

காஷ்மீர்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் ஏவுகணையால் தாக்கப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்திஸ்தான் விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் அலி அமீன் கண்டப்பூர். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உடனான பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்படும் என்றார். இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை பாகிஸ்தான் எதிரியாக கருதும் என்று குறிப்பிட்ட அலி அமீன், இந்தியா மீதும், அதை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஐ.நா. வில் தனது முதல் உரையை நிகழ்த்திய பாக்., பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மீது குற்றம்சாட்டி பேசினார். தொடர்ந்து இந்தியா மீது அணு ஆயுத போர் தொடுக்கப்படும் என பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என அந்நாட்டு அமைச்சர் உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : attack ,countries ,India ,Kashmir ,Pakistani , Minister of Kashmir, India, Nuclear Attack, Pakistan
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...