×

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு: பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டத்தால் ஆபத்து: பி.ஆர்.பாண்டியன்

சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறினர். தனியார் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் மூலம் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிட்டது என தெரிவித்தார். பெரு நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை ஒப்படைக்கவே குத்தகை சட்டம் வழி வகுக்கும் என கூறினார். விவசாயிகளின் கருத்தை கேட்காமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது தவறு என தெரிவித்தார்.

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒப்பந்த சாகுபடி சட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் எனவும் கூறினார். குத்தகை சட்டம் வந்தால் விவசாய தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம் என கூறினார்.விவசாயிகள் விலை பொருட்களை பெரு நிறுவனங்களிடம் விற்கப்படும் சூழல் ஏற்படலாம் என கூறினார். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி குத்தகை சட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும் என கூறினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டதால் ஆபத்து நேரிடும் என்று தெரிவித்தார். பாரம்பரிய விவசாய முறைகளையும், விதைகளையும் அழிக்க வேண்டாம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : Farmers' Union ,Tamil Nadu Government , Farmers',Union ,objected ,Tamil Nadu Government's, Agreement
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...