×

இடைத்தரகர் மூலம் ஐரோப்பிய எம்.பிக்கள் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டதாக வெளியான தகவலால் வெடித்தது சர்ச்சை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலையை பார்வையிட வந்த ஐரோப்பிய எம்.பிக்கள் குழு வருகையை குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு 23 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் நேற்று வந்தனர். அவர்களை, குண்டு துளைக்காத காரில், பாதுகாப்பு படையினர், ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். அப்போது, மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களில், பாதுகாப்பு படையினர் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனிடையே, ஐரோப்பிய எம்.பி,க்கள் மடி சர்மா என்ற பெண் இடைத்தரகர் மூலம் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டது உறுதியாகியுள்ளது. இவ்வளவு முக்கியமான சந்திப்பை இடைத்தரகர் ஒருவர் செய்தது எவ்வாறு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஷ்மீரில் எல்லாம் சுமூகமாக உள்ளது என்று வெளியுலகத்தை நம்ப செய்வதற்காக மத்திய அரசு போடும் கபட நாடகம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி கவுரவ் வல்லப் கூறியதாவது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், மத்திய அரசு தற்போது காஷ்மீரை பார்வையிட ஐரோப்பிய எம்பி.க்களை அழைத்துள்ளது. என்ன திட்டத்திற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக விரும்பும் வார்த்தையை கூறும்படி அந்த எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

காஷ்மீரில் எல்லாம் சுமூகமாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் வலதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவர்கள் எனவும் குற்றம் சாட்டினார். அதேபோல, ஜம்மு - காஷ்மீர் நிலவரத்தை பார்வையிட ஐரோப்பிய பார்லிமென்டைச் சேர்ந்த 23 எம்.பி.,க்கள் குழுவுக்கு அனுமதி அளித்ததற்கு முன், நம் எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். இதனிடையே காஷ்மீரில் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களை ஐரோப்பிய எம்.பி.க்கள் எதிர்கொண்டனர். தற்போதும் காஷ்மீரில் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. என்றாலும் காஷ்மீரில் அமைதிக்கான நம்பிக்கை தெரிவதாக ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவில் உள்ள ஹென்றி மல்லோஸ் தெரிவித்துள்ளார்.

Tags : MPs ,European ,Kashmir , Jammu and Kashmir, European MPs, Arrival, Mediator, BJP, Controversy, Opposition, Accusations
× RELATED உத்தரகாண்டில் ₹130 கோடி கிரிப்டோகரன்சி பறிமுதல்