×

8 நாட்களில் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்து ஹரியானாவை சேர்ந்த ராணுவ வீரர் சாதனை

கன்னியாகுமரி: ஹரியானாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 3,604 கி.மீ பயணித்துள்ளார். இந்த தூரத்தை 8 நாட்கள் மற்றும் 9 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த 21-ம் தேதி நண்பர்களுடன் பயணத்தை தொடங்கிய அவர் ஹிமாச்சல பிரதேஷ், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரியை வந்தடைந்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் இதற்கு முந்தையை சாதனையை இவர் முறியடித்துள்ளார். முந்தைய சாதனையை விட 2 நாட்கள் முன்னதாகவே இலக்கை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Tags : Hero ,Haryana Soldier ,Kanyakumari ,Srinagar ,Haryana , Srinagar, Kanyakumari, Bicycle, Haryana, Soldier, Adventure
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...