×

சிறுநீரக செயலிழப்பு, ரத்த அணுக்கள் குறைவால் உயிருக்கு போராடி வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்!

லாகூர்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் புகாரை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று Kot Lakhpat சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு 8 வார கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கடந்த சனிக்கிழமை நவாஸ் ஷெரிப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் அவரின் நிலை சிறிது சிறிதாக மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக அவரின் குடும்ப மருத்துவர் அத்னன் கான் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ரத்த அணுக்கள் குறைவு, நெஞ்சு வலி ஆகியவற்றால், நவாஸ் ஷெரீப்பின் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 45,000ல் இருந்து 25,000 ஆக குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைந்துள்ளது. எனவே, மோசமான நிலையில் உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தனது தந்தையின் ரத்த அணுக்களில் விஷம் கலக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக நவாஸ் ஷெரீப் மகன் உசேன் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தனது தந்தையின் நாவசின் உடல்நிலை மோசமடைந்த போதிலும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்காதது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நவாஸ் ஷெரிப் மகனின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் உயிருக்கு போராடுவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Tags : Nawaz Sharif ,Pakistani , Nawaz Sharif, anxiety disorder, health condition, kidney failure, blood cells, decrease
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்