×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Puducherry , Tamil Nadu, Puducherry, Heavy Rain, Weather Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...