×

112-வது தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: 112-வது தேவர் ஜெயந்தியை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்னர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜை விழா கொண்டாட்டம் நேற்று முதல் ஆரம்பமானது.

மதுரையில் தேவரின் ஆன்மீக விழாவில், அவரின் நினைவாலய வளாகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை பாதுகாப்புக்காக 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடு இருப்பதாகவும், அடிப்படை தேவைகளான  குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்,  யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்களுடன் 112-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா தொடங்கியது.

பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் தொடங்கிய பூஜையில், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முதலமைச்சர் வருகையால் மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவ சிலையை காண ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags : 112 Thevar Jayanti Festival ,Chief Minister ,Edappadi Palanisamy ,Tamil Nadu ,Pasumpon Muthumalinga ,Goddess ,Pasumpon Muthumalinga Deva. 112 Thevar Jayanti Festival , Thevar Jayanthi Festival, Pasumpon Muthumalinga Thevara, Hon. Chief Minister of Tamil Nadu Edappadi Palanisamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...