×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலி: தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட பள்ளிகளுக்கும், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது மழை பெய்வதால், ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கனமழை காரணமாக மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனியில் கொட்டிவரும் கனமழையை அடுத்து, மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலை பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்


சென்னையில் விடிய விடிய மழை கொட்டிய போதும், இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : schools ,Holidays ,Tamil Nadu ,Tirunelveli ,districts ,colleges ,Thoothukudi , Northeast Monsoon, Thoothukudi, Tirunelveli, Holiday
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!