×

பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி அதிகாரிகள் திடீர் மாற்றம்: வணிக வரித்துறை செயலாளர் அதிரடி

சென்னை: பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவு: திண்டுக்கல் மாவட்ட பதிவாளராக உள்ள லதா, பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் பதிவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை பதிவுத்துறை மாவட்ட பதிவாளராக இருந்த சேகர், திருச்சி பதிவு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தஞ்சாவூர் பதிவு டிஐஜியாக இருந்த சுதா முல்யா, பதிவுத்துறை ஐஜியின் தனி உதவியாளர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த ஆறுமுகம், திருநெல்வேலி பதிவு டிஐஜியாக மாற்றப்பட்டார்.

திருச்சி பதிவு டிஐஜியாக இருந்த சுவாமிநாதன், பதிவுத்துறையின் பயிற்சி மைய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் சார்பதிவாளர் (இணை1), பதவி உயர்வு பெற்று மதுரை மண்டல பதிவு உதவி ஐஜியாகவும், வடசென்னை சார் பதிவாளர் சுரேஷ்குமார், கோவை மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை சார்பதிவாளர் ராஜா, ஈரோடு மாவட்ட பதிவாளராகவும், திருவல்லிக்கேணி சார் பதிவாளர் மணிவண்ணன், திண்டுக்கல் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட பதிவாளராக உள்ள சித்ரா, திருச்சி மண்டல பதிவு உதவி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட பதிவாளராக இருந்த அசோகன், தஞ்சாவூர் மாவட்ட பதிவு உதவி ஐஜியாகவும், திருச்சி மண்டல பதிவு உதவி ஐஜியாக இருந்த பால்பாண்டி, திருச்சி மாவட்ட பதிவு உதவி ஐஜியாகவும், ஈரோடு மாவட்ட பதிவாளராக உள்ள இந்திரா, வட சென்னை மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். அரக்கோணம் மாவட்ட பதிவாளராக இருந்த அகிலா, தூத்துக்குடி மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டார். தற்போது அவர் மீண்டும் அரக்கோணம் மாவட்ட பதிவாளராக தொடர்ந்து பணியாற்றுவார். சென்னை சவுகார்பேட்டை மாவட்ட பதிவாளராக இருந்த மீரா மொய்தீன், மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சார் பதிவாளராக இருந்த சக்திவேல், கோவை சார் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். கும்பகோணம் மாவட்ட பதிவாளராக இருந்த சுசீலா, திருச்சி சார்பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : action officers ,Secretary of Commerce ,Action in Action ,Securities and Exchange Department: Secretary of Commerce Tax Action The Securities and Exchange Commission , Securities and Exchange Commission, Secretary of Commerce, Action in Action
× RELATED பதிவு திருமண நடைமுறையில் மாற்றம்