×

மெரினாவில் வேலியே பயிரை மேய்ந்த கதை வாலிபரை அடித்து காலில் விழவைத்து 10,000 பறித்த போலீஸ்: கடமை தவறிய 3 பேரிடம் உயரதிகாரிகள் விசாரணை

சென்னை: மெரினா கடற்கரையில் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை என்று கூறி அடித்து உதைத்ததோடு விடாமல், காலில் விழவைத்து 10 ஆயிரம் பணத்தை பறித்த 3 காவலர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியை சேர்ந்தவர் உத்தவராஜா (28). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தவராஜா நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். பின்னர் மணல் பரப்பில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு சீருடையில் வந்த 3 காவலர்கள் உத்தவராஜாவை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது காவலர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த காவலர்கள் 3 பேரும் உத்தவராஜாவை கடுமையாக முகத்தில் தாக்கியுள்ளனர். அதை பார்த்ததும் சக நண்பர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். அடித்ததும் இல்லாமல் 3 காவலர்களும் உத்தவராஜாவை தங்களது காலில் விழவைத்து அவரிடம் இருந்து 10 ஆயிரத்தை பறித்து கொண்டு ெசன்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த உத்தவராஜா மெரினா காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மீதும் புகார் அளித்துள்ளார்.

அதில், கடற்கரையில் நண்பர்களுடன் அமர்ந்து இருந்த போது, காசிநாதன், கவியரசன் உட்பட 3 காவலர்கள் தன்னை விசாரணை என்ற பெயரில் மிரட்டியும் அடித்து உதைத்து காலில் விழவைத்து ₹10 ஆயிரத்தை பிடுங்கி சென்றனர். காவலர்கள் அடித்ததில் எனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட 3 காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன்படி மெரினா போலீசார் வாலிபரை தாக்கி பணம் பறித்த காசிநாதன், கவியரசன் உட்பட 3 காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் மெரினா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் புகார் கொடுத்த உத்தவராஜாவிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tags : policeman ,plaintiff ,Marina Marine Corridor Beating , Beating , plaintiff, placing a foot , seizing 10,000, police
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...