×

உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி வாக்குச்சாவடிகளில் 5 வண்ணங்களில் வாக்குச்சீட்டு

வாக்கு பதிவு நேரம் காலை 7 - மாலை 5 மணி வரை * மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சிப் பகுதிகளில் 5 வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை படிப்படியாக மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ேதர்தலுக்காக 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனைத் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், மாநில கட்சிகளாக திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன மேலும் பதிவு செய்யப்பட்ட 247 கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான தனி சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நகர்புறங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம், ஊராட்சிப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி பகுதிகளில் எப்படி நடக்கும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி  கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படும். மேலும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது தொடர்பான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வாக்குச்சீட்டின் இடது பகுதியில் வாக்காளர் பட்டியல் பதிவு எண் மற்றும் வாக்காளர் வரிசை எண் எழுதுவதற்கான இடம் இருக்கும். வலது பகுதியில் வாக்காளர் கையெழுத்து இடுவதற்கான இடம் இருக்க வேண்டும். வாக்குச்சீட்டு 4 முதல் 5 இன்ச் அகலம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

10 மணி நேரம் வாக்குப்பதிவு
உள்ளாட்சி தேர்தலில் 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ெவளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் நாளான்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும்.

Tags : Elections , Local Elections, Panchayat Ballots, 5 Colors, Ballot
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு