நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 26ம் தேதி இரவு ஒரு ெதாலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், ‘நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று மட்டும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
சாலிகிராமத்தில் விஜய் தந்தை வீடு மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதன் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது.

விசாரணையில், அண்ணா சாலையில் உள்ள ஒரு நபருக்கு சொந்தமான செல்போனில் இருந்து பேசப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.  அப்போது, ‘எனது வீட்டின் வழியாக வந்த ஒருவர் அவசரமாக பெற்றோருக்கு போன் செய்ய வேண்டும் என கூறி, எனது செல்போனை வாங்கி பேசினார். அவர் யார்? என்று எனக்கு தெரியாது’ என்றார். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் கூறுவது உண்மையா என அறிய அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்கின்றனர்.


Tags : Bomb attack ,Vijay ,house Actor Vijay ,home , Actor Vijay , returns , home, Bomb threat
× RELATED டெல்லி ஜே.என்.யு. பல்கலையில்...