×

கோயில் நிலங்களை ஏழைகளுக்கு தருவது குறித்து பரிசீலனை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: அரசு புறம்போக்கு மற்றும் கோயில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் துணை செயலாளர் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பதில் மனுவில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோயில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும்.கோயிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Tags : Temple Lands for the Poor: Government Information ,Temple Lands and the Poor , Govt. , Information , Temple Lands , Poor
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...