×

ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவிற்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த 24ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து அன்று நடந்த பத்திர பதிவுகள் எவ்வளவு, அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என ஒப்பிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1,67,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சார்பதிவாளர் ஆனந்தராஜனிடம் மட்டும் 1,07,000 பறிமுதல் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் நேற்று ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் ஆனந்தராஜன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கி கணக்கை ஆய்வு செய்தனர்.  மேலும் லாக்கரை சோதனை செய்தபோது பணம், நகைகள் இருந்தது. அனைத்தையும் லாக்கரில் வைத்து பூட்டி சாவியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7 மற்றும் 7 (A) கீழ் வழக்குப்பதிந்தனர். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : Srirangam Srirangam ,bribery house ,Defendant ,raid , Srirangam, Defendant's house, Corruption police, raid
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது