×

டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் பரிதாபம்: குமரி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சையின்றி மூதாட்டி பலி

நாகர்கோவில்:  டாக்டர்கள் ஸ்டிரைக்கால் உரிய சிகிச்சையின்றி குமரியில் நேற்று மூதாட்டி பலியானார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை. இவரது மனைவி பிரசன்னா(75). இவர் குடல்புண் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 17ம் தேதி வயிற்று வலி அதிகமானதை தொடர்ந்து பிரசன்னாவை ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பிரசன்னா நேற்று காலை இறந்தார். பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளித்ததால்தான் பிரசன்னா இறந்தார் என பிரசன்னாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.  

இதுகுறித்து அவரது மகன் பாலன், டாக்டர்கள் தொடர்வேலை நிறுத்தம் காரணமாக எனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. பயிற்சி டாக்டர்கள் மட்டும் சிகிச்சை அளித்து வந்தனர். மூத்த டாக்டர்கள் சிகிச்சை அளித்து இருந்தால், எனது தாயை காப்பாற்றி இருக்கலாம் என கூறினார். டீன் பாலாஜி நாதன் கூறுகையில், மூதாட்டிக்கு 2 சிறுநீரகத்திலும் கிருமி தொற்று இருந்தது. மேலும்  தொற்று, ரத்தம் முழுவதும் பரவி இருந்தது. இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 80 % பேரை காப்பாற்றுவது கடினம். அதனால்  இறந்துள்ளார் என்றார்.

Tags : Doctors ,strike , Doctors strike, without proper treatment, elderly, kills
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து