×

ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் இஸ்ரோ அதிகாரிகள் ரகசிய ஆய்வு

உடன்குடி: இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டின் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைய சிறந்த பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியை தேர்வு செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரோ அதிகாரிகள் திடீரென குலசேகரன்பட்டினம், கூடல்நகர் பகுதியில் ரகசிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கேட்ட போது விரைவில் பொதுமக்களுக்கு உரிய தகவல் அளித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் கூறிச் சென்றதாக தெரிகிறது. ஏற்கனவே திருச்செந்தூர் வந்த அமைச்சர் உதயகுமார் ராக்கெட் ஏவுவதற்கு குலசேகரன்பட்டினம் சிறந்த இடமாக கண்டறியப்பட்டுள்ளது என கூறியது குறிப்பிடத்தக்கது.


Tags : ISRO ,investigations ,investigation ,area , rocket launcher, area, ISRO officials, undercover investigation
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...