×

தமிழ்நாட்டில் அதிக அளவில் ஆழ்துளை கிணறு மரணங்கள்: தேனியில் சிக்கியவரை துணை ராணுவம் மீட்டதா?

சென்னை: தமிழ்நாட்டில் அதிக அளவில் ஆழ்துளை கிணறு மரணங்கள் நடந்துள்ளன. அதில் யாருடைய ஆட்சியில் அதிக அளவில் மரணங்கள் நடந்துள்ளன என்று தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதோடு தேனியில் சிக்கியவரை மீட்க துணை ராணுவம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:

அதிமுக ஆட்சி :
30.8.2001: சென்னை மண்ணடி ஆடியபாதம் தெருவில் தமிழ்மணி (5), 35 அடி ஆழத்தில், 60 மணி நேரத்தில் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. தீயணைப்புப் படை, ராணுவம், கடலோரக் காவல்படை இப்பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் ஜெயக்குமார், அன்வர்ராஜா உடனிருந்தனர்.
20.7.2002: காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் தைப்பாக்கம் கிராமம் ராம்குமார் (8), 20 அடி ஆழத்தில், 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தான்.

திமுக ஆட்சி :
22.2.2009: மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி ராஜதானி கிராமம் மாயி இருளன் (6), 80 அடி ஆழத்துக்கும் கீழ் சிக்கியிருந்தான். 30 மணி நேரத்தில் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகுதான், உயிரிழந்தான். தீயணைப்புப் படையோடு திருச்சி, பெங்களூருவில் இருந்து வந்த துணை ராணுவ வீரர்கள் இணைந்து பணி செய்தனர்.
27.8.2009: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அண்டம்பள்ளம் கிராமம் கோபிநாத் (3), 20 அடி ஆழத்தில், 10 மணிநேரத்தில் உயிரோடு மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தான்.

அதிமுக ஆட்சி :
8.9.2011:  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கைலாசநாதபுரம் கிராமத்தில் சுதர்சன் (5), 20 அடி ஆழத்தில், 15 மணி நேரத்தில் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. 30.9.2012 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மந்தையூர் கிராமம் குணா (2), 25 அடி ஆழத்தில், 4 மணி நேரத்தில் தீயணைப்புத் துறையால் உயிரோடு மீட்கப்பட்டான்.
27.4.2013: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரிபாளி இனங்கனூர் கிராமம் முத்துலட்சுமி (7), 15 அடி ஆழத்தில், 16 மணி நேரத்தில் பிணமாக மீட்கப்பட்டாள்.
28.9.2013: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புலவன்பாடி கிராமம் தேவி (4), 30 அடி ஆழத்தில், 11 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தாள்.
5.4.2014: விழுப்புரம் மாவட்டம் பல்லகச்சேரி காட்டுக்கொட்டகை கிராமம் மதுமிதா (3), 30 அடி ஆழத்தில், 19 மணி நேரத்தில் பிணமாக மீட்கப்பட்டாள்.
14.4.2014: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் குத்தாலப்பேரி கிராமம் ஹர்சன் (3), 12 அடி ஆழத்தில், 6 மணி நேரத்தில் மதுரை மணிகண்டன் ரோபோ இயந்திரம் மூலம் உயிரோடு மீட்கப்பட்டான்.
15.4.2014: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையம் காந்திநகர் சுஜித் (2), 45 அடி ஆழத்தில், 24 மணி நேரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
12.4.2015: வேலூர் மாவட்டம் கூராம்பாடி கிராமம் தமிழ்செல்வன் (2), 20 அடி ஆழத்தில், 9 மணி நேரத்தில் மீட்கப்பட்டு உயிரிழந்தான்.
30.8.2017: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகம்பட்டு கிராமம் விஜய (2), 6 அடி ஆழத்தில் ஒரு மணி நேரத்திற்குள் கிராம மக்களால் உயிரோடு மீட்கப்பட்டாள்.
23.9.2018: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் புதுப்பள்ளி கிராமம் சிவதர்ஷினி (2), 15 அடி ஆழத்திலிருந்து, மூன்று மணி நேரத்தில் தீயணைப்புத் துறையால் உயிரோடு மீட்கப்பட்டார்.
25.10.2019: சுஜித் வில்சன் 500 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 88 அடியில் சிக்கி 5 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டான்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நிருபர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தேனியில் மாயி இருளன், ஆழ்துளை கிணற்றில் சிக்கியபோது ஏன் ராணுவத்தை கூப்பிடவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

Tags : deaths ,Tamil Nadu ,paramilitaries ,Deep Wells , Tamil Nadu, deep wells and deaths
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...