×

ஜெ.ஜெ.நகரில் ‘யார் தாதா’ என்பதில் போட்டி என் வளர்ச்சியை தடுத்ததால் வெட்டி கொன்றேன்: கைது செய்யப்பட்ட ரவுடி பரபரப்பு வாக்குமூலம்

அண்ணாநகர்: சென்னை ஜெ.ஜெ.நகர் பாடி புதுநகர் 13வது தெருவை சேர்ந்தவர் அழகுமுருகன்(27). பிரபல ரவுடியான இவர் மீது 2014ம் ஆண்டு சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கு ஒன்றும், கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்றும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த எதிர் தரப்பை சேர்ந்த ரவுடி மோகன்(25) என்பவருக்கும் அழகுமுருகனுக்கும் இடையே ஜெ.ஜெ.நகர் பகுதியில் ‘யார் தாதா’ என்பதில் கடந்த 4 ஆண்டுகளான போட்டி இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ரவுடி அழகுமுருகன், தனது நண்பருடன் பைக்கில் பாடி புதுநகர் 11வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், வழிமறித்து ஓட ஓட சரமாரியாக வெட்டி கொன்றனர். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ நகர் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ரவுடி அழகுமுருகனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், யார் தாதா என்ற பிரச்னையில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி மோகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அழகு முருகனை கொலை செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க உயர் போலீசார் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர்கள் பெருந்துறைமுருகன், சத்தியலிங்கம் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். மேலும், ரவுடி மோகனுடன் தொடர்பில் உள்ள நபர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து கண்காணித்த போது மோகன் கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி மோகன் மற்றும் அவனது கூட்டாளிகளான தமிழ்செல்வன் (19), டெனியல் (19), சரண் (எ) பச்சை கிளி (19), அம்பத்தூர் சேர்ந்தவர் விக்னேஷ்(19) அகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது ெசய்தனர். மேலும், அழகுமுருகனை கொலை செய்தது ரவுடி மோகன் தான் என்று தெரிந்த உடன் அழகுமுருகன் ஆதரவாளர்கள் ேநற்று முன்தினம் இரவு ரவுடி  மோகன் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அனைத்தையும் அடித்து நொறுக்கினர். பின்னர் ரவுடி மோகன் கொலை செய்தது பற்றி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ஜெ.ெஜ.நகர் பாடி புதுநகர் பகுதியில் யார் பெரிய தாதா என்பதில் கடந்த 4 ஆண்டுகளாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் ரவுடி அழகுமுருகனுக்கும், ரவுடி மோகனுக்கும் இடையே அடிக்கடி தகராறும் மோதலும் நடந்து வந்தது. இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது.

பல நேரங்களில் அழகுமுருகன் ஆட்கள் மோகன் ஆட்களை அடித்து உதைத்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முக்கிய நகர் ஒருவர் வீட்டு பிறந்த நாள் நிகர்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு ‘நான் தான் தாதா’ என்று மோகன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி அழகுமுருகன் என்றும் நான் தான் தாதா என்று கூறி பிறந்த நாள் விழாவிலேயே மோகனை அடித்து உதைத்துள்ளார். இது ரவுடி மோகனுக்கு பெரும் கவுரவ பிரச்னையாக மாறியது. இதனால் தனக்கு போட்டியாக  உள்ள ரவுடி அழகுமுருகனை கொலை செய்ய மோகன் தனது நண்பர்களுடன் தீட்டம் தீட்டினான். இதற்கிடையே ஜெ.ஜெ.நகர் பகுதியில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எல்லாம் தாதாவாக இருந்த ரவுடி அழகு முருகனிடம் தான் சென்றது. இது மோகனுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இனி அழகுமுருகனை விட்டுவைத்தால் இந்த பகுதிக்கு தாதாவாக வரவே முடியாது என முடிவு செய்து, தனது ஆட்களை வைத்து அழகுமுருகனை கொலை செய்ய இரண்டு நாட்களாக கண்காணித்து நேற்று முன்தினம் திட்டமிட்டப்படி பைக்கில் செல்லும் போது, ரவுடி மோகன் உட்பட 5 பேர் மூகமுடி அணிந்து வந்து ரவுடி அழகுமுருகனை ஓட ஓட வெட்டி கொலை செய்து பழியை தீர்த்துள்ளனர். இவ்வாறு ரவுடி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : competition ,JJ Nagar ,Yar Dada ,death , Arrest, Rowdy, Confession in JJ Nagar
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி