தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் இன்று காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று காலை 7 மணி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

* அண்ணா சாலையில், சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் மற்றும் சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை எக்ஸ் லிங்க் சாலை சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு,  லிங்க் சாலை - மாடல் அட்மேன்ட் ரோடு -  வி.என். சாலை -  தெற்கு போக் சாலை - வடக்கு போக் சாலை - தியாகராயா சாலை - எல்டாம்ஸ் சாலை -  எஸ்ஐஇடி - கே.பி. தாசன் சாலை - வழியாக தங்கள் இலக்கை அடையலாம்

* அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் வழியாக  சேமியர்ஸ் சாலை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடது புறமாக வெங்கட் நாராயணா சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு தெற்கு போக் சாலை - வடக்கு போக் சாலை - தியாகராயா சாலை - எல்டாம்ஸ் சாலை - எஸ்ஐஇடி -    கே.பி. தாசன் சாலை - வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்,

*  அண்ணா சாலையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் - அண்ணா சாலை எக்ஸ் செனடாப் ரோடு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு  ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் வழியாக கோட்டூர்புரம் பாலம் - காந்தி மண்டபம் சாலை - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

*  ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, அண்ணா சாலை எக்ஸ் செனடாப் ரோடு சந்திப்பில் இருந்து வாகனங்கள் கோட்டூர்புரம் நோக்கி அனுமதிக்கப்படும். கோட்டூர்புரத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

*  சேமியர்ஸ் சாலையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லக் கூடிய வாகனங்கள் டர்ன் புல்ஸ்  சந்திப்பிலிருந்து செனடாப் ரோடு சந்திப்பு -ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் -  காந்தி மண்டபம் சாலை - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - வழியாக செல்ல திருப்பி விடப்படும். போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில்,

தேவை ஏற்பட்டால் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்:

*  அண்ணா சாலையில் கிண்டியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் சின்னமலை சந்திப்பிலிருந்து நந்தனம் நோக்கி அனுமதிக்கப்படாமல், தாலுகா ஆபீஸ் சாலை - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - காந்தி மண்டபம் சாலை - கோட்டூர்புரம் சாலை  வழியாக தங்கள் இலக்கை சென்று அடைய  திருப்பி விடப்படும்.

* அண்ணா சாலையில் இருந்து நந்தனம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் சி.ஐ.டி நகர் 1வது மெயின் ரோடு எக்ஸ் அண்ணா சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, சி.ஐ.டி நகர் 1வது மெயின் ரோடு - தெற்கு உஸ்மான் சாலை- மேட்லி சந்திப்பு - பர்கிட் ரோடு - தணிகாசலம் ரோடு - மெலனி ரோடு - தெற்கு போக் சாலை - வடக்கு போக் சாலை - வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம்.

*  கத்திப்பாரா மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் சிப்பெட் -  அம்பாள் நகர் - காசி மேம்பாலம் - வடபழனி - ஆற்காடு ரோடு வழியாக அண்ணா சாலை நோக்கி செல்ல திருப்பி விடப்படுவார்கள்.

தாம்பரத்திலிருந்து கத்திப்பாரா நோக்கி வரக்கூடிய சரக்கு வாகனங்கள் கீழ்க்கண்ட இடங்களில்  திருப்பி விடப்படும்:

* கத்திப்பாரா சந்திப்பில்  சிப்பெட் நோக்கி திருப்பி விடப்படும்.
*  திருநீர்மலை மேம்பாலத்தில் பைபாஸ் நோக்கி திருப்பி விடப்படும்.
*  வெட்ரன் லைனில் 200 அடி சாலை  மற்றும்  பழைய மாகாபலிபுரம் சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
*  தாம்பரத்திலிருந்து பைபாஸ் நோக்கி திருப்பி விடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anna ,road ,Chennai , Thevar Jayanthi, Chennai, Anna Road, Traffic Transfer
× RELATED ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு...