×

புதிய தலாய்லாமா தேர்வில் எங்கள் ஒப்புதலை பெறுவது கட்டாயம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங்: ‘திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமாவின் வாரிசை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் ஒப்புதலை பெறுவது அவசியம்,’ என சீனா காட்டமாக தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது திபெத். இந்த நாட்டின் புத்தமத தலைவரான தலாய்லாமா (84) திபெத்தில் சீன ஆதிக்கத்தை எதிர்த்ததால், அவருக்கு எதிராக சீன அரசு திரும்பியது. இதனால், அங்கிருந்து தப்பி இந்தியாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தலாய்லாமாவை நேற்று முன்தினம் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் சாம் புரோன்பேக் சந்தித்து பேசினார்.

பின்னர், பேசிய புரோன் பேக், ‘திபெத்தியர்கள் தங்கள் மதத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளனர். தலாய்லாமாவின் வாரிசை தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. இதை எந்த அரசோ, அமைப்போ தடுக்க முடியாது’ என தெரிவித்தார். சீனா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. ‘எங்கள் ஒப்புதல் இன்றி அடுத்த தலாய்லாமாவை தேர்ந்ெதடுக்க முடியாது’ என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறி உள்ளார்.

Tags : Dalai Lama ,China ,US , The New Dalai Lama, Mandatory, United States, China
× RELATED தலாய்லாமா குறித்து சர்ச்சை கருத்து நடிகை கங்கனாவுக்கு கருப்புக்கொடி