×

ஐரோப்பிய எம்பி.க்கள் காஷ்மீரில் அனுமதி பாஜ.வின் தேசப்பற்று ஆபத்தானது: பிரியங்கா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய பாஜ அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு காஷ்மீர் நிலவரத்தை பார்வையிட சென்றபோது அவர்களை அனுமதிக்காமல், காஷ்மீர் விமான நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் அறிய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 23 எம்பி.க்கள் கொண்ட குழு காஷ்மீர் வந்துள்ளது.  

இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்து இந்தியில் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘காஷ்மீர் நிலவரம் குறித்து அறிய இந்திய எம்பி.க்களை அனுமதிக்காத மத்திய அரசு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த எம்பி.க்கள் குழுவை அனுமதித்துள்ளது. பாஜ.வின் இத்தகைய தேசப்பற்று ஆபத்தானது,’ என்று கூறியுள்ளார்.

Tags : Priyanka ,BJP ,MPs ,European ,Kashmir Priyanka ,Kashmir , European MP, Kashmir, Priyanka, indictment
× RELATED உத்தரப்பிரதேச மாநிலத்தில்...