×

பயிற்சி ஆட்டத்தில் நியூசி. லெவன் வெற்றி: கோலின் மன்றோ அதிரடி சதம்

லிங்கன்: இங்கிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி டி20 போட்டியில், தொடக்க வீரர் கோலின் மன்றோவின் அதிரடி சதத்தால் நியூசிலாந்து லெவன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து லெவன் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. ஜேம்ஸ் வின்ஸ் 46, சாம் பில்லிங்ஸ் 27, ஜோ டென்லி 39*, லூயிஸ் கிரிகோரி 29* ரன் எடுத்தனர். நியூசி. லெவன் பந்துவீச்சில் அனுராக் வர்மா 3, ஹாம்ப்டன், கிப்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து லெவன் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து வென்றது. செய்பெர்ட் 12, தேவ்சிச் 16 ரன்னில் வெளியேறினர். கேப்டன் கோலின் மன்றோ 107 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்), அனாரு கிச்சன் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து லெவன் வென்று பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை மறுநாள் நடக்கிறது.

Tags : NYC ,Colin Monroe ,Training game , Training Atom, NYC. Eleven, Colin Monroe
× RELATED 3 நாள் பயிற்சி ஆட்டம் வாரியத் தலைவர் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதல்