×

கொல்கத்தாவில் பகல்/இரவு டெஸ்ட்

மும்பை: இந்தியா - வங்கதேசம் அணிகளிடையே நவம்பர் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டி, பகல்/இரவு போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதை அடுத்து, அவற்றை சுவாரசியமாக்கும் வகையில் பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த போட்டிகளில் சிவப்பு நிற பந்துக்கு பதிலாக ரோஜா வண்ண (பிங்க்) பந்துகள் உபயோகிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட சில அணிகள் ஏற்கனவே பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், இந்திய அணி இதில் தயக்கம் காட்டி வந்தது.

பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்ற கங்குலி, பகல்/இரவு டெஸ்டில் விளையாட அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் இது குறித்து கேப்டன் கோஹ்லியுடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் (நவ. 22-26) பகல்/இரவு அடிப்படையில் நடைபெறும் என கங்குலி நேற்று அறிவித்தார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டி20 போட்டி டெல்லியில் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Test ,Kolkata , Kolkata, Day / Night Test
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை