காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேர்வு மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தேர்வு மையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். தீவிரவாதிகள் மீது ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தீவிரவாதிகள் - ராணுவத்தினர் மோதலால் தேர்வு மையத்தில் சிக்கி 5 மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். தீவிரவாதிகள் திடீரென தேர்வு மையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.  

மேலும் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வு மையத்தில் சிக்கி உள்ள 5 மாணவர்களை வெளியே கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Terrorists ,selection center ,Kashmir ,district ,Pulwama ,Indian ,Pulawama ,Indian Army , Terrorists,attack,selection center,Kashmir's,Pulawama district,Indian Army
× RELATED ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில்...