×

திருப்பத்தூர் அருகே திறந்த நிலையில் இருந்த 10 போர்வெல்கள் மூடல்

திருப்பத்தூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பராமரிப்பற்ற ஆழ்துளை கிணற்றில் கடந்த 25ம் தேதி சுஜித் வில்சன்(2) என்ற சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாக 200க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி இன்று அதிகாலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பராமரிப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூட அதிகாரிகளுக்கு ஏற்கனவே கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கிராமப்பகுதிகளில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது.  அதன்படி ஆற்காடு அடுத்த காவனூர் அண்ணா வீதியில் மூடப்படாமல் இருந்த 2 ஆழ்துளை கிணறுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேதமுத்து முன்னிலையில் நேற்று மூடி போட்டு மூடப்பட்டது.  

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி தலைமையில் 39 ஊராட்சிகளிலும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குனிச்சி, சிம்மனபுதூர், கந்திலி, கரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூடப்படாமல் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடி போட்டு மூடினர். மேலும் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகள் இருந்தால் உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும், அவற்றை மூட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர். இதேபோல் காட்பாடி காந்தி நகர் அம்மா உணவகம் அருகே பராமரிப்பற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றை உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து அதன் மேல்பகுதியில் பைப் மூடியை பொருத்தி மூடினர். ஏற்கனவே 3 முறை இந்த போர்வெல் மூடப்பட்டு இருந்தது. ஆனால் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அதை அறுத்து எடுத்து சென்றுவிடுவதாகவும், அதனை தொடர்ந்து மூடி வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Closure ,warships ,Tirupathur. 10 ,Tirupathur , Closure , 10 warships ,open, near ,Tirupathur
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...