அனைத்து வகைப்பள்ளிகளிலும் பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து வகைப்பள்ளிகளிலும் பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் கழிவுநீர் தொட்டிகள், கிணறுகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ளகட்டடங்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது அனைத்தையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>