×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிந்த சுர்ஜித் குடும்பத்தினருக்கு முதல்வர் நேரில் சென்று ஆறுதல்: அரசு, அதிமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

திருச்சி: குழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சுர்ஜித்தின் தந்தை பிரிட்டோ, தாயார் கலாமேரியிடம் முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் சுர்ஜித் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணி அளவில் சுர்ஜித் வில்சன் அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் வழுந்தார். விழுந்த உடன் அவரது பெற்றோர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மீட்பு பணி நடைபெறும் போது அரசுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் தகவல் கிடைத்த உடன் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இந்த மீட்புப் பணியில் ஓஎன்ஜிசி, என்எல்சி, என்.ஐ.டி, அண்ணா பல்கலை கழகம், போன்ற நிறுவனத்துடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த மீட்பு பணி நடைபெற்றது.

தனியார் நிறுவனம் எல்&டி தொழில்நுட்ப வசதியும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் முயற்சி பலன் அளிக்கவில்லை. அரசை பொறுத்தவரை எல்லா வகையிலும் செயல்பட்டது. இதற்கு உதவிகரமாக என்டிஆர்ஃப், எஸ்.டி.ஆர்.ஃப், காவல்துறையை சார்ந்த 200 காவலர்கள், தீயணைப்புத்துறையை சார்ந்த 200 காவலர்கள், வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் இந்த மீட்பு பணி முகாமில் சிறுவனை உயிரோடு மீட்கப்பட வேண்டும் என பணியில் ஈடுப்பட்டனர். துணை முதலமைச்சர் அவர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். சுர்ஜித் வில்சனை உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இரவு பகல் பாராமல் அரசு முழுமையான மீட்பு பணியில் ஈடுப்பட்டது என முதல்வர் பேட்டியளித்தார்.

இந்நிலையில் இந்த சிறுவனை இழந்து வாழும் இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொதுநிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் உதவி தொகையாகவும், அதேபோல அஇஅதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் கழகத்தின் சார்பாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த சிறுவனை இழந்து வாழும் அவரது தாய், தந்தையருக்கும், குடும்பத்தினருக்கும் அரசின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்தார்.

Tags : death ,Surjit , Surjit,family's, death, deep, well
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...