×

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து

நாகை: நாகை அருகே கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தததில் வீட்டில் இருந்த 3 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பெய்த கனமழையால் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை முற்றிலும் மளமளவென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த மூன்று பேரும் உயிர்தப்பினர். சுனாமியில் பாதிக்கப்பட்டு வீடு, உடமைகளை இழந்த அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு பிரபல தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு 68 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் பல வீடுகள் சிதிலமடைந்து குடியிருக்க தகுதி அற்றதாக மாறி இருக்கிறது. மேலும் மழை நீர் வீட்டிற்குள் ஒழுகுவது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நீடித்து வருவதால் அங்கு வசிக்க முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவிக்கின்றனர். தொடர்ந்து, தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால் இதர வீடுகளும் இடிந்து விழும் ஆபத்து நிலவுவதால் கட்டிடங்களை புனரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து வீட்டில் இருந்த மின்சார பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் வீடுகளை பார்வையிட்டு சென்றதாகவும், ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : district ,tsunami ,Nagai ,house roof collapse accident ,Nagapattinam district , Nagai, heavy rains, tsunami dwellings, roof of the house, accident
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...