×

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து இண்டிகோ நிறுவனம் 300 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்

மும்பை: ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 300 விமானங்களை வாங்குவதற்கான இண்டிகோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஏ320 நியோ ரக விமானங்களை வாங்க இண்டிகோ விமான சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 300 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், ஏர்பஸ் நிறுவனத்தின் நவீன ரக விமானங்களும் இந்த ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவலை உறுதி செய்ய ஏர்பஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

தற்போது வரை விமான ஒப்பந்தம் தொடர்பாக தங்களிடம் எந்த திட்டமும் இல்லை என ஏர்பஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார். மேலும் சில காலமாகவே தனது விமான சேவையை விரிவாக்கும் திட்டத்தை பரிசீலித்து வந்த இந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் விரிவாக்கத் திட்டத்தில் இறங்கியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு 100 ஏ320 ரக விமானங்களும், 2011-ம் ஆண்டு 180 விமானங்களும், 2015-ம் ஆண்டு 250 ஏ320நியோ விமானங்களை தற்போது 300 விமானங்களையும் ஆர்ட்ர் செய்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் தள்ளுபடி விலைகள், குத்தகை ஒப்பந்தங்கள் மற்றும் குறைவான மேம்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவை இந்நிறுவனத்தின் தொடர் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : IndiGo ,Airbus , IndiGo,plans,buy,300 aircraft,Airbus
× RELATED சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி