×

ஆட்சியில் சரிபாதி பங்கு தரமுடியாது என முதல்வர் பட்னாவிஸ் கூறியதையடுத்து பாஜக - சிவசேனா நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து

மும்பை: முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதையடுத்து, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே நடக்கவிருந்த பேச்சவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து 6 நாட்கள் நிறைவடைந்த போதிலும் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, அந்த கூட்டணிக்கு எளிதாக கிடைத்தது.

இந்த நிலையில், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நிலவுகிறது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, சுழற்சி முறையில், முதல்வர் பதவியை எங்களுக்கு தர வேண்டும் என, சிவசேனா தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். ஆட்சி அமைப்பதை பாஜக தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மாற்றுவழி உள்ளதாக உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாகவும், மாற்று வழியை ஏற்கும் பாவச்செயலைச் செய்ய சிவசேனா விரும்பவில்லை என்றும் சிவசேனா கூறியிருந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டு காலம் என பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா கட்சி கூறுவது போன்று முதலமைச்சர் பதவியை அக்கட்சியுடன் 2.5 ஆண்டு காலம் பகிர்ந்து கொள்வதாக கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் இதையே தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு தானே முதலைச்சர் பதவியில் இருக்கப்போவதாக கூறிய பட்னாவிஸ், சிவசேனா-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கிடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Patnavis ,talks ,Shiv Sena ,BJP , BJP, Shiv Sena, rule, divide, Uttav Thackeray, Devendra Patnais, negotiations, cancellation
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை