×

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்து, 39,832 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 160 புள்ளிகள் அதிகரித்து 11,787 புள்ளிகளாக உயர்ந்தது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய மாற்றம் ஏதுமின்றி 70 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.


Tags : Indian ,boom , Stock, trading, Sensex, Nifty
× RELATED இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு