×

குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பது மிகுந்த துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது : கே.எஸ்.அழகிரி

சென்னை : ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக கடந்த ஐந்து நாட்களாக செய்த கடுமையான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் குழந்தை உயிரிழந்திருப்பது மிகுந்த துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இனி எந்த காலத்திலும் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக ஆட்சியாளர்களை அறிக்கையின் வாயிலாக கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார். மேலும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : death ,Baby Sujith ,KS Alagiri , Athulai, Child, Sujith, Anjali, KSAlagiri, Tamil Nadu Congress
× RELATED கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்...