×

மத்திய பிரதேச மாநிலத்தில் வினோத திருவிழா... 20 பேர் காயம்

இந்தூர் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிங்கோத் போர் எனப் அழைக்கப்படும் வினோத திருவிழா நடைபெற்றது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்திலுள்ள கௌதம்புரா கிராமத்தில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்த நாளில் பாரம்பரியமாக இந்த வினோத திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த திருவிழாவில் இரு குழுவினர் ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளை கொளுத்தி வீசியெறிவார்கள். தேவநாராயண் கோயில் மைதானத்தில் நடைபெறும் இந்த திருவிழா போர் காலங்களில் நடைபெறுவது போன்று இருக்கும். இதனை காண ஏராளமான மக்கள் இங்கு கூடுவார்கள். அப்போது ராக்கெட் வெடிகளை கொளுத்தி எதிர்தரப்பினர் மீது வீசுவார்கள். இந்த ஹிங்கோத் போர் திருவிழாவில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Tags : festival ,Madhya Pradesh ,Gautampura ,Indore ,Hingot War , Indore,20 injured , Hingot War ,Gautampura
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...