×

இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்பில்லை: கூடங்குளம் அதிகாரிகள் விளக்கம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய தகவலைகளை இணையத்தின் மூலம் ஹேக்கர்கள் திருடிவிட்டதாக கூறப்படுவதற்கு அணுமின் நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வலைத்தளங்களில் பரவும் தகவல்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். அணுமின்நிலைய தகவல்களை இணையத்தின் மூலம் ஹேக்கர்கள் திருடிவிட்டதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இணையத்தில் வைக்கப்படாததால் அணுமின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக்கர் உள்ளிட்ட யாரும் திருட வாய்ப்பில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கூடங்குளத்தில் அணுமின் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் ஏதும் இணையத்தில் வைக்கப்படவில்லை. நிர்வாகம் தொடர்பான தகவல்கள் மட்டுமே இணையத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2ம் அணு உலைகள் மூலம் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4வது உலைகளுக்கான பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல, 5,6 உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இணையதள தாக்குதலைகள் நடத்தியதாகவும், அணுமின் நிலையத்தின் தகவலைகள் அனைத்தையும் எடுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வந்தது. மேலும், அணுமின் நிலையம் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும், முதல் மற்றும் இரண்டாம் உலைகளில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தகவலைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

இந்த சூழ்நிலையில், அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, அணுமின் நிலைய தகவல்கள் இணைய தளத்துடன் இணைக்கப்படவில்லை. அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள intraconnection மூலமாகவே அணுஉலைகள் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எனவே, இணையதளத்தின் மூலமாக கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எவ்வித தாக்குதலும் நடத்த முடியாது என அவர்கள் கூறியுள்ளனர். அணுமின் நிலையத்தின் முதல் உலையில் 1000 மெகாவாட், 2வது அணுஉலையில் இருந்து 600 மெகா வாட் அளவில் மின்உற்பத்தி செய்யப்படுவதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுதவிர, அணுமின் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள எரிபொருள்கள் மற்றும் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள யுரேனியம் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Hackers ,Kudankulam , Kudankulam Nuclear Station, Hackers, Information, Theft, Authorities, Denial
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...