×

சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் : ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை : குழந்தை சுஜித்தின் மரணம் மனதுக்கு மிகவும் வேதனையளிப்பதாக ட்விட்டரில் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார். மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : death ,Rajinikanth ,Sujith , Baby Sujith, Twitter, Rajinikanth, condolences, deep down
× RELATED அரசியல் கட்சி தொடங்குவது குறித்து...