×

பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா - சவுதி ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன: சவுதியில் மோடி பேச்சு

சவுதி: இந்தியா - சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன என மோடி கூறியுள்ளார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். King Khalid சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது. அவரை ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார். தொடர்ந்து, மன்னர் அரண்மனைக்‍கு சென்ற மோடிக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. ரியாத்தில், எதிர்கால முதலீட்டுக்‍கான தொடக்‍கம் என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவில் அடுத்தது என்ன? என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதையடுத்து சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று சவுதியில் உள்ள செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியா - சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. வளரும் நாடுகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை இன்றியமையாதது என தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது என கூறினார். இந்தியா, சவுதி அரேபியா ஆகியவை இதேபோன்ற பாதுகாப்புக் கவலைகளை தங்கள் சுற்றுப்புறத்திலும் பகிர்ந்து கொள்கின்றன என தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பல்வேறு பரிமாணங்களில் உள்ள எங்கள் உறவுகள் வலுவானவை மற்றும் ஆழமானவை, மேலும் அவை மேலும் பலப்படும் என கூறினார்.

Tags : Saudi ,Modi ,India , India, Saudi Arabia, security problem, Modi, tour, interview, news agency
× RELATED சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20...