×

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

திருச்சி :திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். பாத்திமாபுதூ​ரில் உள்ள குழந்தை சுஜித்தின் கல்லறைக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், சுஜித் வில்சனின் பெற்றோர் பிரிட்டோ, கலாமேரியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திருநாவுக்கரசர், கே.என்.நேரு, திருச்சி சிவா, செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்டோரும் சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Tags : DMK Stalin ,parents ,Sujith ,DMK ,child sujith ,well , Deepal, baby, Sujith, Anjali, DMK, flower ring, Stalin
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது