×

சீன அதிபருக்கு மாமல்லபுரம்... ரஷ்ய அதிபருக்கு மதுரை! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வரும் விளாடிமீர் புடின்!

புதுடெல்லி: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர்.

இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்த நிலையில் சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமிழகத்துக்கு வருகை தருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில்ஜனவரி மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக அவர் தமிழகம் வருகை தருகிறார் என தெரிகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம்,பாலமேடு, மற்றும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார் செய்யும் வகையில், அவற்றிற்கு நீச்சல் பயிற்சி, ஓட்டம், மண்குவியலில் மண் குத்துதல், ஓட்டம், மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்துவிடுதல் போன்ற பயிற்சிகளை காளை வளர்ப்போர் பயிற்சி அளிப்பர்.

Tags : President ,Mamallapuram ,Chinese ,Russian ,Modi ,Madurai ,Vladimir Putin ,Alankanallur ,Vladimir Puthun , Russian President, Vladimir Puthun, Alankanallur, Jallikattu, Prime Minister Modi
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்