×

ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: எம்.பி நவாஸ் கனி வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அழகன்குளத்தில் 2017ம் ஆண்டு தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பழங்கால பொருட்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட அகழாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார். அழகன்குளத்தில் இருந்து கடல் வழியாக வணிகம் செய்தது போன்றவற்றை எல்லாம் அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 8 கட்டமாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து அவை இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. எனவே அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சியை  மீண்டும் துவங்க கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கு கடந்த 8 கட்டத்தில் கைப்பற்றப்பட்ட பழங்கால பொருட்களை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்ட வேண்டும் எனவும், வேறு இங்கும் கிடைக்காத பல அறிய பொருட்கள் எல்லாம் அழகன்குளத்தில் கிடைத்திருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அழகன்குளத்தில் பண்டைய கால தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நவாஸ் மணி தெரிவித்துள்ளார். இதனை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Nawaz Kani ,Ramanathapuram Re-excavation ,Alakanankulam , Ramanathapuram, Azharankulam, Excavation, Finance, MP Nawaz Kani
× RELATED ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும்...