குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வேதனை

சென்னை : குழந்தை சுஜித் இழப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது. இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். இந்த மரணம் சாதாரணமானது அல்ல.சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது. இருந்து. உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான். பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை போதித்து இருக்கின்றது. மீட்பதற்கு கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கின்றது. மீண்டு வரவேண்டுமென்ற பிரார்த்தனை பலிக்காமல் போய் விட்டது.இத்தகைய நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். என்றார்.

Related Stories:

>