×

சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி : கனிமொழி

சென்னை : சுஜித்தின் இழப்பு ஒட்டு மொத்த சமூகத்தின் தோல்வி என்று நாடாளுமன்ற  உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். எப்படியாவது அவன் காப்பாற்ற படுவான், காப்பாற்ற படவேண்டும் என்று துடித்த லட்சக்கணக்கான இதயங்கள் இன்று மீளா துயரில் உள்ளது. அச்சிறுவனை இழந்து வாடும்  குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதல். மற்றும் கடந்த நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Sujith ,failure ,society , சுஜி இழப்பு , சமூகத்தின் தோல்வி,கனிமொழி
× RELATED சம்பா நெற்பயிரில் இலைகருகல் நோயை...