குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது : திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

நடுகாட்டுப்பட்டி  : ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு  குழுவினரும் மீட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் அழுகிய நிலையின் குழந்தை சுஜித்தின்  உடல் மீட்கப்பட்டது என்றும் தற்போது உடல் பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு  குழுவினர் வைத்து இருந்த கருவிகள் மூலம் உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

alignment=

மேலும் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றையும், அவரை காப்பற்ற தோண்டப்பட்ட குழியும் கான்கிரீட் கலவைகள் மூலம் முழுவதும் மூடப்படும் என்றும்  மூடிவிட்டு தான் இந்த இடத்தை விட்டு செல்வேன் என்று மாவட்ட ஆட்சியர் உறுதிபட தெரிவித்தார். காலை 6.30 மணிக்கு ரெடிமெட் கான்கிரீட் கலவைகள் வண்டிகள் வந்ததும் குழிகளை மூடுவதற்கான பணிகள் தொடங்கி காலை 8மணிக்குள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

alignment=

மேலும் குழந்தை சுஜித் எப்போது இறந்தான் என்பது பிரேதபரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்றும் பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

Related Stories: