×

சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரத்து 630 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதனால், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்தநிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். எனவே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகள் வசதிக்காகவும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டது.
 
அதன்படி, நேற்று மாலை முதல் 100 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 8 பேருந்துகளும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து 23 பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து 27 பேருந்துகளும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 34 பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து 8 பேருந்துகள் என நாள் ஒன்றுக்கு 100 சிறப்பு பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. இச்சேவை இன்று ஒருநாள் மட்டும் நடைமுறையில் இருக்கும்.


Tags : Passengers ,Chennai , 200 special buses , convenience , passengers
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...