×

ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக போப்பிற்கு கேரள கன்னியாஸ்திரி கடிதம்

கொச்சி:  போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கன்னியாஸ்திரிகள் மடத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கனில் உள்ள போப்பாண்டவருக்கு கேரள கன்னியாஸ்திரி லூசி கலப்புரா கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள குரவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பிஷப் பிரான்கோ முல்லக்கல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கோரி,  கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து, கன்னியாஸ்திரிகள் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி பிஷ்ப் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஏராளமான கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.இதில் கன்னியாஸ்திரி லூசி கல்புராவும் கலந்து கொண்டார். கன்னியாஸ்திரிகள் மடதத்தின் எச்சரிக்கையையும் மீறி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மடத்தில் இருந்து அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இந்த முடிவை பிரான்சிஸ்கன் கிளரிஸ்ட் கான்கிரிகேஷன் (எப்சிசி) என்ற அமைப்பு எடுத்தது. இந்த அமைப்பு, ‘ரோமன் கத்தோலிக்க சர்ச்’-ன்கீழ் செயல்படுகிறது.பிஷப் பிரான்கோவினால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக குரல்கொடுத்ததற்காக, தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பு தரப்படவில்லை. கன்னியாஸ்திரிகள் மடத்தில் இருந்து நீக்கப்பட்டது, சட்டத்திற்கு புறம்பானது. இது விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் தாங்கள் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கன்னியாஸ்திரி லூசி கல்ப்புரா, கடிதம்  ஒன்றை வாடிக்கனில் உள்ள சர்ச்கள் அமைப்பின் நிர்வாகி  லியோனார்டு கார்டினல் சன்டரிக்கு எழுதினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் தாங்கள் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த போப்பாண்டவருக்கு கடிதம்  எழுதியுள்ளார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : nun ,Kerala ,Pope , disciplinary, Kerala nun's ,letter,Pope
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...