×

போலி மதத்தலைவர்களை மக்கள் தள்ளிவைக்க வேண்டும்: சுகிசிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்

ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதில் எந்தவிதமான அதிர்ச்சியும் எனக்கு இல்லை. ஏனென்றால் கலியுகத்தில் நிறைய போலியான சாமியார்கள், துறவிகள், சமய தலைவர்கள், சன்னியாசிகள் தோன்றுவார்கள் என்று இயல்பாகவே விதிக்கப்பட்ட, நூல்களில் சொல்லப்பட்ட ஒரு உண்மை. மக்களிடையே மனதில் திறக்க வேண்டிய ெதளிவுன்னு சொன்னால், முறையாக பணம் சேர்க்க வேண்டும். அப்படி இல்லாட்டி அப்படி சேர்க்கும் பணம் நமது உடலில் ஒட்டாது என்கிற பயம் உண்டாக வேண்டும். ஆன்மிகம் என்பதே முழுக்க, முழுக்க பணத்தோடு சம்பந்தப்பட்டதாகி
விட்டது.

கோயிலில் பெருமாள் விரதம் இருக்கிறார் என்றால் இன்றைக்கு தங்ககவசம் என்கின்றனர். எனக்கு புரியவில்லை. தங்கம் பெரியதா அல்லது பெருமாள் பெரியதா? உண்மையிலேயே பெருமாள் பெரியது என்றால் சும்மா இருக்கிற அன்று தான் கும்பிட வேண்டும். தங்ககவசம் போட்டு இருக்கிறார்கள், வைரத்தில் பொன்முடி வைத்திருக்கிறார்கள். வைரம் என்றால் பெரிதாக தெரிகிறது. கடவுள் துணை பொருளாகவும், பணம் முழுபொருளாகிவிட்டது.  இது மக்கள் மனதில் இருக்கிற நோய். போலியான மதத்தலைவர்களை எந்த மதத்திலும் அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் அனுமதிக்கக்கூடாது. தள்ளி வைக்க வேண்டும். ஆனால் சாமியார்கள் வருகிறவர்களை குளிப்பாட்டுகிறார்கள். வாங்க... வாங்க என்று சொல்லி, சந்தோஷமாக பேசி மகிழ வைத்து விடுகிறார்கள். இதனால் முன்னுரிமை கோயில்களில் இருந்து ஆசிரமத்திற்கு போய்விட்டது. ஆசிரமத்துக்கு முக்கியத்துவம் போனதால் தான் பணமாக போகிறது.

தற்போது ரெய்டு நடத்தியதாக  சொல்றோம். எனக்கு என்ன டவுட் என்றால், இப்ப பக்தர்கள் காணிக்கை இது போன்று போய் சேர முடியாது. ஒரு சிலரின் கருப்பு பணம் இதைப் போன்று ஆசிரமங்களில் தான் வைக்கின்றார்கள். சமுதாயத்திற்கு நல்லது செய்யாத கோடீஸ்வர தனி மனிதர்கள், தங்கள் பணத்துக்கு சரியான பாதுகாப்பு, ஆசிரமங்கள், குருமார்கள் என்று முடிவு செய்து கோடீஸ்வரர்கள் தங்களுடைய கருப்பு பணத்தை ஆசிரமத்தில் கொண்டு போய் வைக்கின்றனர். இது பக்தர்கள் கொடுத்த காணிக்கை என்கிற காதில் பூ வைக்கிற வேலை.

இது எனது தனிப்பட்ட கருத்து.கடவுளின் பிம்பத்தை மதவாதிகள் வேற மாதிரி வைத்திருக்கிறார்கள். பூஜை, புனஸ்காரம், யாகத்தில் தான் தெய்வதன்மை இருக்கிறது. அதற்கு செய்வதால் தான் முக்கியத்துவம். கடவுளை திருப்திப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்து ஆழமாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு பெயர் சமூக மனவைத்தியம் (சோசியல் இக்னாசிஸ்). கோயில்கள் நேராக கொண்டு போய் சாமிகள் கிட்ட கொடுப்பது சாமியார்கள் ரெப்ரசின்டேட்டிவ் வாயை திறந்து பேசுகிறார்கள். இவர்கள் தான் சாமியார்கள் என்ற பிம்பம். இவர்களின் ஒழுக்கக்கேடுகளை சொன்னால் அவர்களை சார்ந்தவர்கள் கோபவப்பட்டு அடிக்க வருகிறார்கள் உதைக்க வருகிறார்கள், நம்புகிறார்கள், நாம் பார்க்கும் போது இப்படி இருப்பவர் தெய்வமாகத் தான் இருப்பார்கள் என்று நம்புகின்றனர்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை, அவர்கள் சரியில்லை என்று ெதரிந்தாலும் கூட திருத்தி கொள்ள மறுக்கிறார்கள். நாம் இவ்வளவு நாள் இந்த மாதிரி இருந்தது முட்டாள் தனமாகிவிடும். அதனால் கடைசி வரை அதை நியாயப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்படி பல காரணம் இருக்கிறது. கிரிமினல் என்றால் கிரிமினல் தான். அந்த மாதிரி ேயாசிக்கிற சிந்தனைகள் இல்லை. எப்படி அரசியல் கட்சிகளில் கிரிமினல்கள் எப்படி தன்னுடைய கட்சியில் சேர்ந்து விட்டால் ஞானஸ்தானம் பெற்றதை போல் அப்படியே விட்டுவிடுகிறார்களோ. அதே மாதிரி தன் சாதிக்காரன் என்றால் மேற்கொண்டு கிளறக் கூடாது. இந்த கொடுமைகள் எல்லாம் மாறினால் மட்டும் தான் நமக்கெல்லாம் நியாயம் கிடைக்க வழி இருக்கிறது.


Tags : Sukhishivam ,leaders ,Sugasivam ,Speecher , Pseudo , Religious Leaders , sugasivam , speecher
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...